2 ஆண்டுகளாக வீட்டு வாடகை ரூ.20 லட்சம் கொடுக்கவில்லை.., யுவன் சங்கர் ராஜா மீது புகார்
கடந்த 2 ஆண்டுகளாக வீட்டு வாடகை ரூ.20 லட்சம் கொடுக்கவில்லை என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யுவன் மீது புகார்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் ஏரியாவில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்தார். இந்த வாடகை வீட்டின் உரிமையாளர் அஜ்மத் பேகம் ஆவார்.
இவரின் சகோதரர் முகமது ஜாவித் என்பவர் யுவன் சங்கர் ராஜா மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரானது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், "சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வசித்து வந்தார். இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது.
இந்த வீட்டிற்கு வாடகை பாக்கி ரூ.20 லட்சத்தை யுவன் கொடுக்கவில்லை. இது குறித்து எனது சகோதரி அவரிடம் கேட்டும் மறுத்துள்ளார்.
நான் வாடகை பணம் கேட்பதற்கு செல்போனில் அழைத்த போதும் அவர் எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அவரிடம் இருந்து வாடகை பாக்கி மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின்படி, பொலிஸார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |