ஜேர்மனியில் வெறுப்பை எதிர்கொள்ளும் அகதிகள்: ஆய்வு முடிவுகள்
ஜேர்மனியில், அகதிகள் வெறுப்பை எதிர்கொள்வது அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
வெறுப்பை எதிர்கொள்ளும் அகதிகள்
ஜேர்மனியில், Xenophobia என்னும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பும் பாரபட்சமும் அதிகரித்துவருவதாக German Institute for Economic Research (DIW Berlin) என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
2019இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மூன்றில் ஒரு பங்கு அகதிகள் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதே கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் பலர், தாங்கள் தங்கள் இனம், மொழி அல்லது பெயர் காரணமாக ஜேர்மனியில் பாகுபாட்டைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்கள்.
வீடு தேடும்போது பாகுபாட்டை எதிர்கொண்டதாக 32 சதவிகிதம் பேரும், வேலைக்கு விண்ணப்பிக்கும்போது பாகுபாட்டை எதிர்கொண்டதாக 18 சதவிகிதம் பேரும், வேலை செய்யும் இடத்தில் பாகுபாட்டை எதிர்கொண்டதாக 14 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், மேற்கு ஜேர்மனியில் வேலை செய்பவர்களைவிட கிழக்கு ஜேர்மனியில் வேலை செய்பவர்கள் அதிக பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், ஆண் அகதிகள் கிழக்கு ஜேர்மனியில் வீடு மற்றும் வேலை தேடும்போது அதிக அளவில் தடைகளை எதிர்கொண்டதாகவும் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |