பிரான்சில் ஒன்பது பேருக்கு Omicron கொரோனா வைரஸ் தொற்று உறுதி
பிரான்சில், ஒன்பது பேருக்கு Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில், ஒன்பது பேருக்கு Omicron கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவை அனைத்துமே தென்னாப்பிரிக்க பயணத்துடன் தொடர்புடையவை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இன்று காலை நிலவரப்படி, பிரான்சில், île-de-France, Haut-Rhin மற்றும் Vendée regions ஆகிய பகுதிகளில், ஒன்பது பேருக்கு Omicron கொரோனா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது
பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véran கூறும்போது, சில வாரங்களாகவே இந்த வைரஸ் பிரான்சில் பரவிக்கொண்டிருந்திருக்கலாம் என்றும், மேலும் அதிகம் பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
இந்த வகை கொரோனா வைரஸ் அதிக அபாயம் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், அது எந்த அளவுக்கு மோசமாக மனிதர்களை நோய்வாய்ப்படச் செய்யும் என்பது இதுவரை தெளிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.