இறுகும் லெபனான் - இஸ்ரேல் போர்: இதுவரை ரத்தான சர்வதேச விமான சேவைகளின் பட்டியல்
லெபனான் மீது ஹிஸ்புல்லா படைகளை இலக்கு வைத்து தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி பல்வேறு சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தற்போது தங்கள் சேவைகளை ரத்து செய்து வருகிறது.
உக்கிரமான தாக்குதல்
கடந்த 3 நாட்களாக லெபனான் மீது உக்கிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் காஸா மீது மிக மோசமான தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல், தற்போது லெபனான் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த நிலையில், லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்கும் வாய்ப்பிருப்பதாக இஸ்ரேல் தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் அச்சுறுத்தலான சூழல் உருவாகியுள்ளது.
இதனையடுத்தே பல்வேறு சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி லெபனான் தொடர்பான சேவைகளை ரத்து செய்து வருகிறது. இதில், Air Algerie விமான சேவை நிறுவனம் மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் லெபனானுக்கான அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
Air Arabia நிறுவனமானது ஷார்ஜா மற்றும் அபுதாபியில் இருந்து லெபனானுக்கான சேவைகளை செப்டம்பர் 24ம் திகதி ரத்து செய்துள்ளது. Air France-KLM நிறுவனம் அக்டோபர் 1ம் திகதி வரையில் பெய்ரூட் நகருக்கான சேவைகளையும் செப்டம்பர் 17 முதல் டெல் அவிவ் நகருக்கான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
Air India டெல் அவிவ் நகருக்கான அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளது. Cathay Pacific நிறுவனம் டெல் அவிவ் நகருக்கான அனைத்து சேவைகளையும் 2025 மார்ச் 27 வரையில் ரத்து செய்துள்ளது.
Emirates நிறுவனம் பெய்ரூட்டுக்கான விமான சேவைகளை செப்டம்பர் 24 மற்றும் 25 திகதிகளுக்கு ரத்து செய்துள்ளது. Easyjet நிறுவனம் டெல் அவிவ் நகருக்கான சேவைகளை இனி 2025 மார்ச் 30ம் திகதி முதல் முன்னெடுக்க உள்ளது. அதுவரை அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |