இஸ்ரேல்-ஹமாஸ் பிணைக் கைதிகள் பரிமாற்றம்: வெளிவரும் முரண்பட்ட தகவல்கள்
ஹமாஸ் படையினர் காசாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான முரண்பட்ட தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளனர்.
போர் நிறுத்தம்
கத்தார் நாட்டின் முன்முயற்சியில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான 4 நாள் போர் நிறுத்தம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
அதில், 12 தாய்லாந்து நாட்டவர்கள், 13 இஸ்ரேல் நாட்டவர்கள் என 25 பேரை ஹமாஸ் வாக்குறுதி அளித்தது போல் விடுவித்து இருந்தனர்.
அதே சமயம் பதிலுக்கு இஸ்ரேலிய சிறையில் தவித்து வரும் 39 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது.
வெளிவரும் முரண்பட்ட தகவல்கள்
இந்நிலையில் இரண்டாவது தொகுப்பாக காசாவில் இருந்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான முரண்பட்ட கருத்துக்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
இஸ்ரேலின் சேனல் 12 வெளியிட்டுள்ள தகவலில், செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் இரண்டாவது பிணைக் கைதிகள் தொகுப்பை ஒப்படைக்கத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
Conflicting reports emerge about the release of Israeli hostages in Gaza
— NEXTA (@nexta_tv) November 25, 2023
Israel's Channel 12 reported that Hamas has begun handing over a second group of hostages to the Red Cross.
At the same time, Sky News writes that the terrorists are delaying the release of the second… pic.twitter.com/rgqsAPNqTe
ஆனால் அதே சமயம், போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றத் தவறியதால் ஹமாஸ் படையினர் தங்களது இரண்டாவது பிணைய கைதிகள் விடுவிப்பை தாமதப்படுத்துவதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் இருந்து சீனாவுக்கு சென்ற ஜிம் லுவாண்டா கப்பல் கடத்தல்: செங்கடலில் அத்துமீறும் ஹவுதி படையினர்
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, இன்று இஸ்ரேல் 42 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும், அதற்கு ஈடாக 14 இஸ்ரேலியர்களை ஹமாஸ் படையினர் விடுவிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |