திடீரென எல்லை தாண்டி சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்த விமானத்தால் பெரும் பரபரப்பு
பிரான்ஸ் விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு கட்டுப்படாமல் விமானம் ஒன்று பறந்துவருவதாக சுவிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக சுவிஸ் விமானப்படையின் ஜெட் விமானங்கள் அந்த விமானத்தை மடக்கியுள்ளன.
சுவிட்சர்லாந்துக்குள் எல்லை தாண்டி நுழைந்த சிறிய விமானம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை, பிரான்சிலுள்ள Colmar என்ற இடத்தில் விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு கட்டுப்படாமல் சிறிய ரக விமானம் ஒன்று பறந்துவருவதாக பிரெஞ்சு அதிகாரிகள் சுவிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
Swiss FA 18 Hornets (c) Martyn Wraight
அதற்குள் அந்த விமானம் எல்லையைக் கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்துள்ளது. உடனடியாக, Vaud மாகாணத்திலுள்ள Payerneஇலிருந்து வேகமாக புறப்பட்ட சுவிஸ் விமானப்படையின் ஜெட் விமானங்கள் அந்த விமானத்தை Graubünden பகுதியில் மடக்கியுள்ளன.
விமானத்தின் விமானியைத் தொடர்புகொண்ட சுவிஸ் அதிகாரிகள், அந்த விமானத்தை இத்தாலி விமான எல்லைக்குள் கொண்டு செல்ல, அந்த விமானத்தின் விமானியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.