முகேஷ் அம்பானி டீப்ஃபேக் வீடியோவால் ரூ.33 லட்சம் இழப்பு! ஆன்லைன் மோசடிக்கு காங்கிரஸ் நிர்வாகி பலி
காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஆன்லைனில் ரூ.33 லட்சத்தை இழந்ததை அடுத்து சைபர் கிரைம் பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ஆன்லைன் மோசடிக்கு பலியான காங்கிரஸ் நிர்வாகி
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், அதிநவீன சைபர் மோசடிக்கு பலியாகி ரூ. 33 லட்சத்தை இழந்துள்ளார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் பேசுவது போன்ற டீப்ஃபேக் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவிய டீப்ஃபேக் வீடியோ
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த போலி வீடியோவை நம்பி, காங்கிரஸ் நிர்வாகி பல தவணைகளாக மொத்தம் ரூ. 33 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.
ஆன்லைன் முதலீடு மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் அவர் புகார் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் முடங்கிய பணம்
முதற்கட்ட விசாரணையில், அந்தப் பணம் உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
சைபர் குற்றவாளிகளை கைது செய்து, பணத்தை மீட்பதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |