ரூ.1 கோடிக்கு தங்கம், ரூ.5 கோடிக்கு வீடு.. பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
வயநாடு மக்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிரியங்கா காந்தி, அவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.
பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு
வயநாடு மக்களவை இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிரியங்கா காந்தி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சிம்லாவில் உள்ள தனது ரூ.5.63 கோடி வீடு உட்பட ரூ.12 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளருக்கு சிம்லாவில் ரூ.5.63 கோடியில் வீடு உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் தனக்குச் சொந்தமாக வாங்கிய குடியிருப்பு சொத்து இருப்பதாகவும், அதன் மதிப்பு தற்போது ரூ. 5.63 கோடிக்கு மேல் உள்ளதாகவும் அவர் கூறினார்.
தனது கணவர் ராபர்ட் வதேராவிடம் ரூ.37.9 கோடிக்கு மேல் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.27.64 கோடிக்கு மேல் அசையா சொத்துகள் இருப்பதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.
2023-2024 நிதியாண்டில் பிரியங்கா காந்தி வாத்ராவின் மொத்த வருமானம் ரூ. 46.39 லட்சத்திற்கு மேல் இருந்தது, இதில் வாடகை வருமானம் மற்றும் வங்கிகள் மற்றும் பிற முதலீடுகளின் வட்டியும் அடங்கும்.
இதுதவிர ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.29 லட்சம் மதிப்புள்ள வெள்ளியும் பிரியங்கா வசம் உள்ளது.
டெல்லியின் சுல்தான்பூர் மெஹ்ராலி கிராமத்தில் ரூ.2.10 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தில் ராகுல் காந்திக்கும் பங்கு உள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.
முதலீடுகளை பொறுத்தவரை ரூ.2.24 கோடி மதிப்புள்ள மியூச்சுவல் பண்டு முதலீடுகள், SBI வங்கியில் ரூ.17.38 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய நிலையில் தனது வங்கிக் கணக்கில் சுமார் 3.60 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |