சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்கும் மோடிக்கும் உள்ள பகை - சர்ச்சையை கிளப்பும் காங்கிரஸ்
மோடி எழுதிய கடித்தை சுனிதா வில்லியம் குப்பையில் வீசுவார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
8 நாள் பயணமாக கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) மற்றும் பேரி வில்மோர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்கள் விண்வெளியில் இருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 17 மணிநேரம் பயணம் செய்து இன்று பூமிக்கு திரும்பியுள்ளனர்.
காங்கிரஸ் விமர்சனம்
இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸை வரவேற்று, இந்திய பிரதமரான மோடி நேற்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த கடிதத்தில், சுனிதா வில்லியம்ஸை இந்தியாவின் மகள் என குறிப்பிட்ட மோடி, இந்தியாவில் உங்களைச் சந்திக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை விமர்சித்துள்ள கேரளா மாநில காங்கிரஸ், சுனிதா வில்லியம்ஸ் மோடி எழுதிய கடிதத்தை குப்பையில் வீசுவார் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
Modi pens a letter to Sunita Williams, and in all likelihood she will put it in trash. Why?
— Congress Kerala (@INCKerala) March 18, 2025
She is Haren Pandya's cousin. Haren Pandya was Gujarat home minister who challenged Modi, and he gave secret deposition to Justice VR Krishnaiyer about Modi's role in Gujarat riots,… pic.twitter.com/nFCntim5Ot
குஜராத்தின் முன்னாள் அமைச்சரும், சுனிதா வில்லியம்ஸ் உறவினருமான ஹரேன் பாண்டியா(Haren Pandya) கொலை குறித்தும், 2007 ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸிற்கு மோடி வாழ்த்து தெரிவிக்காததும் குறித்து வெளியான செய்தியை பகிர்ந்து இந்த பதிவை வெளியிட்டுள்ளது.
ஹரேன் பாண்டியா கொலை
2003 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கேசுபாய் படேல் பாஜக ஆட்சியில் ஹரேன் பாண்டியா உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது ஹரேன் பாண்டியாவிற்கு நரேந்திர மோடிக்கும் இடையே கட்சியில் போட்டி நிலவியது.
அதன் பின்னர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக பதவியேற்ற போது, ஹரேன் பாண்டியா வருவாய்த்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அப்போது நரேந்திர மோடிக்கும் ஹரேன் பாண்டியாவுக்கும் மோதல் முற்றியதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து ஹரேன் பாண்டியா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், 2003 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் திகதி காலையில் நடைப்பயிற்சிக்கு சென்ற போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் கொலை செய்யப்பட்டபோது அவரது தந்தையான விட்டல் பாண்டியா நரேந்திர மோடியை நேரடியாக குற்றம் சாட்டினார்.
மோடியை சந்திக்காத சுனிதா வில்லியம்ஸ்
1998 ஆம் ஆண்டு, ஹரனுக்காக பிரச்சாரம் செய்ய அமெரிக்காவிலிருந்து வந்த சுனிதா வில்லியம்ஸ் அவரது வெற்றி ஊர்வலத்திலும் கலந்து கொண்டார். அவர் கொல்லப்பட்டபோது, சுனிதா வில்லியம்ஸ் பயிற்சியில் இருந்ததால் இறுதிச்சடங்கில் பங்கு பெறவில்லை.
இதே போல் மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது, 2007 ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் 195 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தார்.
அப்போதும் இதே போல் அவரது பூர்விகமாக குஜராத் விழாக்கோலம் பூண்டிருந்தது. விஸ்வ குஜராத் சமாஜ் அமைப்பு அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் முதலமைச்சராக இருந்த மோடி, வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.
அதன் பின்னர் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், செப்டம்பர் மாதம் அவருக்கு குஜராத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
2013 ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் குஜராத் சென்ற போது, அவருக்கு மோடிக்கும் சந்திப்பதை ஏற்படுத்த முதல்வர் அலுவலகம் விரும்பியது. ஆனால் சுனிதா வில்லியம்ஸ் சந்திக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |