7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன?
பூமியில் இருந்து 400 கிமீ உயரத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகளை பார்க்கலாம்.
என்னென்ன வசதிகள்
அமெரிக்கா, ரஷ்யா, ஐப்பான், ஐரோப்பா, கனடா விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் பூமியில் இருந்து 400 கிமீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது.
இந்த சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் இன்று காலை பூமிக்கு வந்தடைந்தார். இந்த சர்வதேச விண்வெளி மையத்தின் மொத்த நீளம் 356 அடி ஆகும். அதன் எடை 4.19 லட்சம் கிலோ கிராம் ஆகும்.
இங்கு, 7 அறைகள், 2 குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம், 360 டிகிரி பார்க்கக்கூடிய பெரிய ஜன்னல் கண்ணாடி உள்ளன. அதாவது, ஒரு பெரிய 2 மாடி வீட்டின் பரப்பளவை கொண்டதாகும்.
இங்கு 7 பேர் தங்கலாம். அதற்கு மேல் தங்குவதற்கு சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு ஏற்ற வசதிகளும் செய்யப்பட்டன.
மேலும், தொலைபேசி பூத் அளவுள்ள சிறிய தூக்க பெட்டிகள் உள்ளன. இங்கு தான் விண்வெளி வீரர்கள் தூங்குவார்கள்.
இந்த பெட்டியில் தூக்கப்பை, தலையணை, விளக்கு, காற்று திறப்பு, மடி கணிணி மற்றும் தனிப்பட்ட பொருட்கள் வைப்பதற்கான இடம் உள்ளது.
இதனுள் இருக்கும் சிறிய துவாரத்தின் அருகே தான் தலைவைத்து தூங்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தூங்கும் நபரின் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
தூங்கும் நேரத்தில் சத்தம் மற்றும் ஒளியை தடுக்க காது அடைப்பான்கள் மற்றும் தூக்க முகமூடிகள் உள்ளன. தினமும் அவர்கள் 8.5 மணி நேரம் தூங்க வேண்டும்.
இங்குள்ள உணவு தயாரிக்கும் இடத்தில் சூடான நீர் குழாய் மற்றும் உணவை சூடாக்கும் அமைப்பு உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை உணவானது ஆலைக்கு வந்து சேரும்.
விண்வெளி வீரர்களின் சுவை, விருப்பம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப உணவு வழங்கப்படுகிறது. அவர்கள் விண்வெளிக்கு செல்வதற்கு 5 மாதங்களுக்கு முன்பாக உணவு பட்டியலை வழங்க வேண்டும்.
இதில், இறைச்சி மற்றும் முட்டைகள் தரையில் சமைக்கப்பட்டு ஆலைக்கு வழங்கப்படுகிறது. குழம்பு, கறி, சூப் ஆகியவை உலர்த்தப்பட்டு பொடியாக மாற்றப்படுகிறது. அதனுடன் தண்ணீர் சேர்த்து சமைத்து சாப்பிடுவார்கள்.
இங்கு, மது மற்றும் பிற போதை பொருட்கள், புகை பிடித்தல் கூடாது. இங்குள்ள ஒவ்வொரு நபரும் தினமும் 1.2 கிலோ உணவு சாப்பிட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |