பகவத் கீதையை விண்வெளிக்கு எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்.., ஏன் தெரியுமா?
9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய நிலையில் அவரை பற்றிய விடயங்கள் பேசப்பட்டு வருகிறது.
பகவத் கீதை
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்தனர்.
அவர்களின் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மீண்டும் பூமிக்கு திரும்புவதில் தாமதத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், இவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 17 மணிநேரம் பயணம் செய்து பூமிக்கு திரும்பியுள்ளனர்.
புளோரிடா கடற்பகுதியில் இறங்கிய விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் வெளியே அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு செல்லும் போது தன்னுடன் பகவத் கீதை மற்றும் சமோசாவை எடுத்துச் சென்றுள்ளார். அதோடு அவர் விநாயகர் சிலையையும் கொண்டு சென்றார் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து சுனிதா கூறுகையில், "பகவத் கீதை மற்றும் சமோசா இவை இரண்டுமே என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. பகவத் கீதையை எனது தந்தை எனக்கு பரிசளித்தார்.
பூமியில் உள்ள மனிதர்கள் போலவே விண்வெளியிலும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு இது உதவுகிறது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |