19 ஆண்டுகளுக்குப் பிறகு வினேஷ் போகத் மூலம் வெற்றியை கைப்பற்றிய காங்கிரஸ்
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
வினேஷ் போகத் வெற்றி
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது.
ஆனால், தற்போதைய நிலவரப்படி பாஜக 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும், 6 இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை வகிக்கின்றன. இதன்படி, ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கவுள்ளது.
இந்த நிலையில், ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்.
அதாவது, 14 -வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை 6,015 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் 19 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவில் உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்த காரணத்தால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |