புகலிடக்கோரிக்கையாளர்களால் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பில்லை: பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்
புலம்பெயர்தல், பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிவருகிறது.
இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களை பெரும் செலவு பிடிக்கும் வீடுகள் மற்றும் ஹொட்டல்களில் தங்க வைப்பதற்கு பதிலாக, முகாம்களில் தங்கவைக்கவேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான கெமி பேடனோக் வலியுறுத்தியுள்ளார்.
புகலிடக்கோரிக்கையாளர்களை முகாம்களில் தங்கவைக்கவேண்டும்
ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50,000ஐ தொட்டுவிட்டது.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசு தவறிவிட்டதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், எசெக்ஸிலுள்ள Epping என்னுமிடத்துக்கு வருகை புரிந்த கெமி, புகலிடக்கோரிக்கையாளர்களை பெரும் செலவு பிடிக்கும் வீடுகள் மற்றும் ஹொட்டல்களில் தங்க வைப்பதற்கு பதிலாக, முகாம்களில் தங்கவைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் இப்படி ஹொட்டல்களிலும் வீடுகளிலும் தங்கவைப்பதால் உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.
சமீபத்தில் Eppingஇல் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர், பிரித்தானிய சிறுமி ஒருத்தியிடம் அத்துமீறிய விடயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆக, அதைக் குறிப்பிட்டுதான் புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களிலும் வீடுகளிலும் தங்கவைப்பதால் உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை என கெமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |