தண்டவாளத்தில் 10 கிலோ மரக்கட்டைகளை போட்டு ரயிலை கவிழ்க்க சதி
ரயில்வே தண்டவாளங்களில் 10 கிலோ மரக்கட்டைகள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலை கவிழ்க்க சதி
இந்தியா முழுவதும் ரயிலை கவிழ்ப்பதற்கு பல்வேறு சம்பவம் அரங்கேறி வருகின்றன. தண்டவாளங்களில் கம்பிகளை வைப்பது, கேஸ் சிலிண்டர்களை வைப்பது போன்ற விடயங்களை மர்ம நபர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு ரயில் கவிழ்ப்பு சதி அரங்கேறியுள்ளது. டெல்லி லக்னோ இடையே ஓடும் பரைலி - வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடத்தில் செல்லும்போது தண்டவாளத்தில் கிடந்த மரக்கட்டைகள் மீது உரசியுள்ளது.
அப்போது, ரயிலின் இரும்பு சக்கரங்களுக்கிடையே மரக்கட்டைகள் சிக்கியதால் சில தூரத்துக்கு அவற்றை இழுத்துக்கொண்டு சென்றுள்ளது.
இதனை அறிந்த ரயில் ஓட்டுநர் சாதுரியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், 2 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், அந்த வழியில் செல்லும் பல்வேறு ரயிலில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தண்டவாளத்தில் இருந்து மரக்கட்டையை அகற்றினர். இந்த மரக்கட்டைகள் சுமார் கிலோ எடை கொண்டதாகும்.
இதுபோன்ற ரயில் கவிழ்ப்பு சதிவேலைகள் குறித்து தேசிய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |