தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு போட்டியிடும் தொகுதி அறிவிப்பு! அவரை எதிர்த்து களம் காண்பது யார்?
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக முதல் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நடிகை குஷ்புவுக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் சீட் எதிர்பார்த்த நிலையில் அந்த தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் குஷ்புக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்த்து திமுக சார்பில் மருத்துவர் எழிலன் போட்டியிடுகிறார்.
மேலும் காரைக்குடியில் ஹெச்.ராஜாவும், அரவக்குறிச்சியில் அண்ணாமலையும்
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும் பாஜக சார்பில் களம் காண்கின்றனர்.