சாலையில் கிடந்த பணப்பையை எடுத்து பொலிஸில் ஒப்படைத்த கட்டட தொழிலாளி
சாலையில் கிடந்த பையில் இருந்த ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த கட்டட தொழிலாளிக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
தொழிலாளிக்கு பாராட்டு
சென்னை நங்கநல்லூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி உமாபாரதி. இவர் நேற்று அந்த சாலை வழியாக நடந்து கொண்டு சென்றிருந்தார். அப்போது சாலையில் ஒரு பை கிடந்ததை பார்த்துள்ளார்.
அதனை உள்ளே திறந்து பார்த்தபோது ரூ.2 லட்சம் ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது. உடனே அவர் அந்த பணப்பையை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார்.
இதையடுத்து, பையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உரியவரிடம் பணத்தை பத்திரமாக பொலிஸார் ஒப்படைத்தனர்.
பின்னர், சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த கட்டட தொழிலாளியின் நேர்மையை பாராட்டி அவருக்கு பொலிஸார் சால்வை அணிவித்து பாராட்டினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |