பிரித்தானியாவில் மிக அதிக அளவில் விலை உயர்ந்துள்ள பொருட்கள்
The products that increased in price most in UK: பிரித்தானியாவில் மிக அதிக அளவில் விலை உயர்ந்துள்ள பொருட்கள் எவை தெரியுமா?
கோவிட் காலகட்டத்துக்குப் பிறகு, அதாவது, லாக் டவுனுக்குப் பிறகு, இன்னும் தெளிவாகக் கூறினால், 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரித்தானியாவில் சில பொருட்கள் கணிசமான அளவில் விலை உயர்ந்துள்ளன.
மிக அதிக அளவில் விலை உயர்ந்துள்ள பொருட்கள்
ஆய்வமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வில், மிக அதிக அளவில் விலை உயர்ந்துள்ள பொருள் ஆலிவ் ஆயில் என தெரியவந்துள்ளது. ஆம், ஆலிவ் ஆயில், 116. 3 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, கால்நடைகளின் உள்ளுறுப்புகளால் செய்யப்படும் உணவாக உட்கொள்ளப்படும் offal என்னும் பொருள், 75.8 சதவிகிதமும், மாட்டிறைச்சி 61.3 சதவிகிதமும் விலை உயர்ந்துள்ளன.
அதைத் தொடர்ந்து, முட்டை விலை 56.7 சதவிகிதமும், பாஸ்தா உணவின் விலை 54.9 சதவிகிதமும், சொக்லேட் விலை 51.2சதவிகிதமும் உயர்ந்துள்ளன.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாலின் விலை 45.8 சதவிகிதமும், சீஸ் விலை 42.2 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.
மேலும், வாகனக் காப்பீடு 72.0 சதவிகிதமும், எரிவாயு விலை 63.3 சதவிகிதமும், மின்சாரக் கட்டணம் 40.8 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

விலை குறைந்துள்ள பொருட்களைப் பார்த்தால், கணினி விலை 24.6 சதவிகிதம் குறைந்துள்ளதை வேண்டுமானால் குறிப்பிட்டுச் சொல்லலாம்!
விடயம் என்னவென்றால், நவம்பர் வாக்கில், மீண்டும் பல பொருட்கள் 3.5 சதவிகிதம் வரை விலை உயர இருப்பதாக ஆய்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |