6.2 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையான வாழைப்பழம்: யார் வாங்கியது தெரியுமா?
அமெரிக்காவில் சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழ கலை பொருள் மிகப்பெரிய விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
பல கோடிக்கு ஏலம் போன வாழைப்பழம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சோத்பியின்(Sotheby's) கலைப் பொருட்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஏலத்தில், “சுவரில் டேப்பால் ஒட்டப்பட்ட வாழைப்பழம்” ஒன்று சுமார் 6.2 மில்லியன் டொலர்களுக்கு (4.9 மில்லியன் பவுண்டுகள்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலிய கலைஞரின் “காமெடியன்” என்ற சுவரில் டேப்பால் ஒட்டப்பட்ட வாழைப்பழம் 2019ம் ஆண்டு முதன் முதலில் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டது.
A banana duct-taped to a wall — a conceptual artwork by Maurizio Cattelan titled "Comedian" — sold to a crypto entrepreneur for $6.2 million with fees at Sotheby's contemporary art auction on Wednesday. https://t.co/bSewDkCv72 pic.twitter.com/0iFHxPrSZ9
— The New York Times (@nytimes) November 21, 2024
இந்த வித்தியாசமான கலைப் படைப்பு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்ட போது, கலைப் படைப்புகள் என்றால் என்ன என்பது போன்ற கேள்விகள்? மற்றும் வாழைப்பழம் அழுகும் போது எப்படி அதனை மாற்றுவது, யாரேனும் அதனை எடுத்து சாப்பிட்டு விட்டால் என்ன செய்வது என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டது.
சொல்லப்போனால் சுவரில் டேப்பால் ஓட்டப்பட்ட வாழைப்பழம் இரண்டு முறை சாப்பிடப்பட்டுள்ளது.//// ஆனால் மாற்று வாழைப்பழமானது உடனடியாக அருங்காட்சியக அதிகாரிகளால் வைக்கப்பட்டது.
நியூயார்க் டைம்ஸ் தகவலில் படி, பெரும் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வாழைப்பழ கலை படைப்பில் உள்ள வாழைப்பழம் அதே நாளில் வெறும் 0.35 டொலருக்கு வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஏலத்தில் பெரும் தொகைக்கு வாங்கப்பட்டதன் மூலம் இதுவரை விற்பனை செய்யப்பட்ட பழங்களில் விலையுயர்ந்த பழமாக இது பெயர் பெற்றுள்ளது.
யார் வாங்கியது?
இந்த வாழைப்பழ படைப்பை சீன கிரிப்டோகரன்சி தொழில்முனைவர் ஜஸ்டின் சன் என்பவர் 6.2 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியுள்ளார்.
The Most Expensive Banana in History: Justin Buys Banana for $6M
— The Crypto Times (@CryptoTimes_io) November 21, 2024
The banana, purchased earlier for $0.35 from a fruit stand.
Now its place as one of the most expensive conceptual artworks. pic.twitter.com/FQp79yDbCx
இந்த காமெடியன் கலைப் படைப்புகாக ஜஸ்டின் சன் கிட்டத்தட்ட 6 போட்டியாளர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் வருங்காலத்தில் கலை அனுபவத்தின் ஒருப்பகுதியாக வாழைப்பழம் சாப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |