விஜய் சேதுபதி பேசிக் கொண்டிருந்தபோதே வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
கடந்த 8ஆவது சீசன் முதல் புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கி சுவாரசியம் குறையாமல் தொகுத்து வழங்கிவருகிறார்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசனில் கடந்த வாரம் ரெட்ரோ மாடர்ன் டாஸ்க் நடைபெற்றது.
இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் செய்த செயலால் பிக்பாஸிடம் மோசமான சீசன் என்ற பெயரை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, ஏற்கனவே வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் உள்ளே சென்றார்.
இந்நிலையில், இந்த வார இறுதியான இன்று விஜய்சேதிபதி என்ன கேள்வி கேப்பார் என்று ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் ரம்யா ஜோ, விஜய்சேதுபதியிடம் நான் வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறி வெளியேறும் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |