நான்காவது தளபதியை இழந்தது ரஷ்யா: உக்ரைன் போரில் தொடர்ந்து பின்னடைவு
உக்ரைன் போரில் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் ரஷ்யா, தனது நான்காவது தளபதியை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேஜர் ஜெனரல் Oleg Mityaev (47) என்னும் அந்த தளபதி, Mariupol நகருக்கு அருகே போரில் கொல்லப்பட்டதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதுடன், அவரது உடலின் புகைப்படம் என்று கூறி, ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் Oleg Mityaev உயிரிழந்திருக்கும் பட்சத்தில், அவர் உக்ரைனிடம் ரஷ்யா இழந்த 13ஆவது இராணுவ அலுவலர் ஆகிறார்.
மேலும், புடினுடைய நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் படைப்பிரிவு ஒன்றிலுள்ள ஏழு சிறப்பு போர் வீரர்களும் உயிரிழந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஆறு பேரின் புகைப்படங்களை ரஷ்யாவே வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றின்போது அவர்களது படங்கள் முன் மலர்கள் வைக்கப்பட்டுள்ளதை வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்றில் காணலாம்.