இந்தியாவுக்கு நாடுகடத்துங்கள்... அமெரிக்கப் பெண் பிரபலம் ஒருவரால் உருவாகியுள்ள சர்ச்சை
அமெரிக்கப் பெண் பிரபலம் ஒருவர் செய்துள்ள ஒரு செயல் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அவரை நாடுகடத்தவேண்டுமென சமூக ஊடகங்களில் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
அமெரிக்கப் பெண் பிரபலம்
நிக்கி ஹாலி என்னும் அமெரிக்கப் பெண் பிரபலம் ஒருவர் செய்த செயல் ஒன்று சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் இஸ்ரேல் சென்றிருந்த நிக்கி, குண்டுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து குண்டு ஒன்றின்மீது ‘அவர்களை முடித்துவிடுங்கள்’ என்று எழுதியுள்ளார். அவருடன் சென்றிருந்த இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினரான Danny Danon இந்தக் காட்சியை சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட, சர்ச்சை வெடித்துள்ளது.
Finish them!
— Danny Danon ?? דני דנון (@dannydanon) May 28, 2024
זה מה שכתבה היום חברתי, השגרירה לשעבר, ניקי היילי על פגז במהלך ביקור במוצב של תותחנים בגבול הצפון.
הגיע הזמן לשינוי משוואה - תושבי צור וצידון יתפנו, תושבי הצפון יחזרו.
צה"ל יכול לנצח! pic.twitter.com/qvLNCXPl7o
இந்தியாவுக்கு நாடுகடத்துங்கள்...
சமூக ஊடகங்களில் நிக்கிக்கு எதிராக பலரும் கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள். அவர்களில் ஒருவர், நிக்கியை இந்தியாவுக்கு நாடுகடத்துங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்குக் காரணம், நிக்கியின் பெற்றோர் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள். நிக்கியின் முழு பெயர், Nimarata Nikki Randhawa என்பதாகும். அவரது தந்தையான Ajit Singh Randhawa, பஞ்சாப் வேளாண்மை பல்கலை முன்னாள் பேராசிரியர். தாயான Raj Kaur Randhawa, டெல்லிப் பல்கலையில் சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்.
நிக்கி, தென் கரோலினாவின் ஆளுநராகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராகவும் இருந்தவர். 2024 ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டிருந்த நிக்கி, பின்னர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். நிக்கி, இஸ்ரேல் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |