பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் கல்வித்தகுதி போலியா? பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் கல்வித்தகுதி குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், இலாகாக்கள் ஆளுநர் மாளிகையால் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது அவரது கல்வித்தகுதி மீது குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பொதுவாக, தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்களை, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும் வேட்புமனு உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்பது விதி.
ஆனால், அமைச்சர் ராஜ்மோகன் தனது எந்தவொரு உறுதிமொழிப் பத்திரத்திலும் தான் பொறியியல் படித்த விபரத்தைக் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.
டிப்ளோமா சான்றிதழ்
அவற்றில் முதன்மையான குற்றச்சாட்டாக, ராஜ்மோகன் கல்லூரி படிப்பில் அரியர் பாடங்களை இன்றுவரை முடிக்கவில்லை என்பதால், அவர் கடந்த வருடம் வரை கூட அரியர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த ஒரு மாணவர்தான் என்பதாகும்.
அதேபோல், அவர் டிப்ளோமா முடித்துள்ளதாகக் கூறப்படும் கல்வி நிறுவனத்திற்கு எந்தவொரு அரசு அமைப்பின் குறைந்தபட்ச அங்கீகாரமும் இல்லை என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், தனது 12ஆம் வகுப்பை முடித்து சுமார் 7 ஆண்டுகள் கழித்தே அமைச்சர் ராஜ்மோகன் இந்த டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக தற்போது இரண்டு முக்கிய கேள்விகள் அமைச்சர் ராஜ்மோகன் மீது எழுந்துள்ளன.
அவர் பொறியியல் படிப்பை முடித்தாரா இல்லையா? ஒருவேளை அவர் முடித்திருந்தால் ஏன் தனது தேர்தல் வேட்புமனுவில் அதனை மறைத்தார்? இந்த கேள்விகளை முன்வைத்து வழக்கு தொடரப்பட்டால், அவரது MLA பதவியே பறிபோகும் அபாயமும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
போலி கல்வி நிறுவனத்தில் பணம் கொடுத்து வாங்கியதாகக் கூறப்படும் ஒரு சான்றிதழை வைத்துக் கொண்டு, ஒரு மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக நீடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |