பழைய பெட்ரோல்-டீசல் காரை மின்சார காராக மாற்ற முடியுமா? எவ்வளவு செலவாகும்?
எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை 2.0-ல் வாகனங்களின் அதிக விலையைக் கருத்தில் கொண்டு 'ரெட்ரோஃபிட்டிங்' ஊக்குவிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கூறினார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் பெட்ரோல், டீசல் இன்ஜின் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற விரும்புகிறார்கள். இந்த செயல்முறை விலை உயர்ந்தது. ஒரு பொதுவான ஜிப்சியில் இந்த வகையான மாற்றத்தை செய்ய சுமார் ரூ. 5 முதல் 6 லட்சம் வரை ஆகலாம்.
இது மிக அதிகம். ஆனால், மக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு, இதற்கான கொள்கையை கொண்டு வருவது குறித்து யோசித்து வருகிறோம்' என்று அவர் கூறினார்.
மேலும், புதிய கொள்கை தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய பாலிசி 6 மாதங்கள் அல்லது புதிய பாலிசி தயாராகும் வரை நீட்டிக்கப்படும் என்று கெலாட் கூறினார்.
டெல்லி மின்சார வாகனக் கொள்கை-2020 ஆகஸ்ட் 8 அன்று காலாவதியானது. புதிய கொள்கை அறிவிக்கப்படும் வரை பழைய கொள்கையின் கீழ் வழங்கப்படும் மானியத்தை அரசு தொடரும்.
EV Retrofiting என்றால் என்ன?
ரெட்ரோஃபிட்டிங் என்பது பெட்ரோல் அல்லது டீசல் கார்களை மின்சார கார்களாக மாற்றும் செயல்முறையாகும். இந்தச் செயல்பாட்டில், பெட்ரோல்/டீசல் எஞ்சின் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி பொருத்தப்படும்.
அதுமட்டுமின்றி, பவர் சிஸ்டம், பிரேக்கிங் சிஸ்டம், சார்ஜிங் சிஸ்டம் போன்ற பிற தேவையான மாற்றங்களும் செய்யப்படுகின்றன. மேலும், காரின் வெளிப்புறத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
EV Retrofitting செய்ய எவ்வளவு செலவாகும்?
பெட்ரோல்/டீசல் காரை எலக்ட்ரிக் காராக மாற்றுவதற்கான செலவு காரின் நிலை, மின் மோட்டார், பேட்டரி செலவு, நிறுவல் செலவு ஆகியவற்றைப் பொறுத்தது. பொதுவாக இதன் மொத்த விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும்.
தற்போது பல நிறுவனங்கள் இந்த EVகளை மறுசீரமைத்து வருகின்றன. இப்போது அதை ஊக்குவிக்கும் நோக்கில் டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |