துரோகி என முத்திரை குத்தப்பட்ட அமெரிக்க அதிகாரி சிறையில் மரணம்: வெளிவரும் பகீர் பின்னணி
அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரியாக பணியாற்றி, பின்னர் ரஷ்யாவுக்காக உளவு வேலை பார்த்த நபர் சிறையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிப்பை ஏற்படுத்திய உளவாளி
அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய உளவாளிகளில் ஒருவர் என முத்திரை குத்தப்பட்டவர் இவர். 79 வயதான ராபர்ட் ஹேன்சன் கொலராடோ மாகாணத்தில் புளோரன்ஸ் பகுதி சிறைச்சாலையில் உள்ளூர் நேரப்படி திங்களன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
NT/Corbis
ரஷ்யாவிடம் இருந்து சுமார் 1.4 மில்லியன் டொலர் பணம், வைரங்கள் உள்ளிட்ட பொருட்களை இவர் கைப்பற்றியுள்ளதாக கூறுகின்றனர். இவரது வழக்கினை சுமார் 300 பேர்கள் கொண்ட குழு விசாரணை செய்துள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் 2002ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். ஹேன்சன் அப்போது தமது 6 பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் வர்ஜீனியாவில் வசித்து வந்துள்ளார்.
@getty
ரகசியங்களை திருடினார்
அவரது பணியின் தனமை கருதி, அரசாங்கத்தின் மிகவும் ரகசிய ஆவணங்களை பார்வையிடும் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்திக்கொண்ட ஹேன்சன், 1985ல் ஆவணங்களை ரஷ்யாவுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளார்.
1976ல் எப்.பி.ஐ அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஹேன்சன், ஒருகட்டத்தில் ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்க ரகசியங்களை திருடினார். ஆனால் பல ஆண்டுகள் சிக்காமல் தப்பித்தும் வந்துள்ளார்.
@getty
1994ல் உளவாளி ஒருவர் சிக்க, ஹேன்சன் மீது சந்தேகம் வலுத்தது. பணி ஓய்வுக்கு தயாராகி வந்த ஹேன்சனை, அதிகாரிகள் தரப்பு துரிதமாக செயல்பட்டு, 2001 ஜனவரி மாதம் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.