நாளை முதல் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
வீடு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி அறிவித்துள்ளார்.
சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
நாடு முழுவதும், நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் தற்போது ரூ.803க்கு விற்பனையாகி வரும் நிலையில், இந்த விலை உயர்வு காரணமாக ரூ.853 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு சாதாரண மானியம் பெறும் பயனாளிகளுக்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்படுவதாக அறிவிப்பே வெளியான சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலால் வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயராது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்களித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |