இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி! சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
சிலிண்டர் விலை குறைப்பு
டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், அனைத்து வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டரின் விலை ரூ.400 குறைக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் மானியம்
தற்போது, சமையல் சிலிண்டருக்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கேஸ் சிலிண்டரின் விலையை குறைத்தால் அரசுக்கு ரூ. 7500 கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், இதுவரை கேஸ் மூலப்பொருள்களின் விலை குறைக்கப்பட்டாலும் சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டரானது மார்ச் 1 ஆம் தேதி ரூ.50 விலையேற்றம் செய்யப்பட்டு ரூ. 1.103 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |