2024 கோபா அமெரிக்கா கால்பந்து தொடர்: 0-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி
2024 கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலி அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றியை தனதாக்கியுள்ளது.
சிலி-அர்ஜென்டினா மோதல்
2024 கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் குரூப் A பிரிவில் உள்ள சிலி மற்றும் அர்ஜென்டினா அணிகள் நேற்றைய போட்டியில் மோதின.
நட்சத்திர வீரர்கள் நிறைந்த இரு அணிகளும் முதல் பாதியில் கோல் அடித்து முன்னிலை பெற கடுமையாக முயற்சித்த நிலையில் 0-0 என்ற கோல் எண்ணிக்கையில் முதல் பாதி சமனில் முடிந்தது.
This challenge from Argentina's Nico Gonzalez against Chile in Copa America ?
— ESPN FC (@ESPNFC) June 26, 2024
No card was given. pic.twitter.com/B6vBkuQff1
முன்னிலை பெற்ற அர்ஜென்டினா
இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புடன் இரண்டாம் பாதி தொடங்கப்பட்ட நிலையில், சிலி அணியின் தடுப்பாட்ட வீரர் கேப்ரியல் சுவாசோ-வுக்கு(Gabriel Suazo) ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.
கோல் கணக்கை எப்படியாவது தொடங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் மாற்று வீரர்களை தொடர்ந்து களமிறக்கினர்.
The VAR lines that were drawn on Lautaro Martinez's match-winning goal for Argentina in their Copa America clash against Chile ? pic.twitter.com/EJ2UeM28lL
— ESPN FC (@ESPNFC) June 26, 2024
இறுதியில் ஆட்டத்தின் 88 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் வீரர் லாட்டாரோ மார்டினெஸ் (Lautaro Martinez) கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். போட்டியில் கூடுதலாக 6 நிமிடங்கள் சேர்க்கபட்ட போதும் சிலி அணியால் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை.
இதன் மூலம் 2024 கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலி அணியை 0-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |