கோபா அமெரிக்க கால்பந்து இறுதிப்போட்டி: மைதானத்திற்கு வெளியே வெடித்த கலவரம்!
அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா இடையே மியாமியில் நடைபெற்ற கோபா அமெரிக்க இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை கலவரத்தால் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.
ரசிகர் கலவரத்தால் 30 நிமிட தாமதம்
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதி வருகின்றனர்.
மியாமியில் நடைபெறும் இந்த போட்டியில் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.
? Copa America final. Shocking.pic.twitter.com/I34BiACfGR
— Fabrizio Romano (@FabrizioRomano) July 15, 2024
அரங்கத்தின் வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள், குறிப்பாக கொலம்பியா ஆதரவாளர்கள், கதவுகளை உடைத்து பாதுகாப்பு படையினரை மீறி உள்ளே நுழைய முயன்றதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள், அரங்கத்தை தற்காலிகமாக மூடினர்.
இந்த கலவரத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட சில ரசிகர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது.
These images of fans struggling to enter the Hard Rock Stadium in Miami ahead of the Copa America final between Argentina and Colombia are devastating.
— Usher Komugisha (@UsherKomugisha) July 14, 2024
This is one of the host venues for the 2026 FIFA World Cup! A lot has to be done to ensure that they are ready in two years! pic.twitter.com/CmM4B9xC0k
உரிய டிக்கெட் இல்லாமல் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயற்சித்த நிலையில், பதற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பின்னர் முறையான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக வெளியான வீடியோவில் ரசிகர்கள் வேலிகளைத் தாண்டி ஓடிச் செல்வதை பார்க்க முடிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |