இத்தாலியில் அடிமைப்படுத்தப்பட்ட 33 இந்தியர்கள்: 2 இந்திய முதலாளிகள் அதிரடி கைது
இத்தாலியில் 33 இந்திய விவசாய தொழிலாளர்களை அடிமைப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட 33 இந்திய விவசாயிகள்
33 இந்திய குடியேறிய தொழிலாளர்கள் இத்தாலியின் வடக்கு வேரோனா மாகாணத்தில் கொடுமைப்படுத்தும் வேலை நிலைமைகளில் இருந்து இத்தாலிய காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.
எதிர்கால வாழ்க்கைக்கான வாக்குறுதிகளால் கவரப்பட்டு, குடியேறிய தொழிலாளர்கள் பருவகால வேலை அனுமதிக்காக அதிக தொகையை (17,000 யூரோ) செலுத்தியுள்ளனர்./// பின்னர் அவர்கள் வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 10-12 மணி நேரம் என மிகக் குறைவான சம்பளத்திற்கு (மணிக்கு 4 யூரோ) நீண்ட நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இறுதியில் இத்தாலிய அதிகாரிகள் சிறப்பு நடவடிக்கையின் மூலம், இந்திய குடிமக்கள் மற்றும் ஏமாற்று வாக்குறுதி வழங்கி வேலைக்கு அமர்த்தியவர்களிடம் இருந்து ஐந்து லட்சம் யூரோக்களை பறிமுதல் செய்தனர்.
2 இந்தியர்கள் கைது
இந்நிலையில், 33 இந்திய விவசாய தொழிலாளர்களை அடிமைப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக ஜூலை 13ம் திகதி இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள், கும்பல் தலைவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
இவர்கள், பதிவு செய்யப்பட்ட ஊழியர்கள் இல்லாத நிறுவனங்களை நடத்தியதாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் அவர்கள் துன்புறுத்தல் மற்றும் உழைப்பு சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளனர்.
இந்த வழக்கு, சமீபத்தில் ஒரு இத்தாலிய பண்ணைத் தொழிலாளரின் சந்தேகத்திற்கிடமான பணியிட விபத்தில் மரணத்தைத் தொடர்ந்து வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |