வெளிநாட்டு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் மாயம்: சந்தேக நபரிடம் விசாரணை
அமெரிக்க பல்கலை ஒன்றில் பயின்றுவந்த இந்திய இளம்பெண் ஒருவர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றபோது மாயமானார்.
தற்போது, அவரை கடைசியாக பார்த்த இளைஞர் ஒருவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
மாயமான இந்திய வம்சாவளி இளம்பெண்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பயின்றுவந்தவர் இந்திய வம்சாவளியினரான சுதிக்ஷா (Sudiksha Konanki, 20) என்னும் இளம்பெண்.
சுதிக்ஷா தனது சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலின் அருகிலுள்ள கடற்கரையில் கடைசியாக காணப்பட்டுள்ளார். அதற்குப் பிறகு அவர் மாயமாகிவிட்டார்.
புதன்கிழமை இரவு, சுதிக்ஷா, ஆறு பேருடன் அந்த கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஐந்து பேர் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குத் திரும்ப, சுதிக்ஷாவும் மற்றொரு இளைஞரும் மட்டும் கடற்கரையிலேயே இருந்துள்ளார்கள்.
இந்நிலையில், சுதிக்ஷாவுடன் கடைசியாக காணப்பட்ட இளைஞரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
யார் அந்த நபர்?
Evidentemente el joven que vio por última vez a la joven de la India Sudiksha Konanki, de 20 años, desaparecida en la madrugada del 6 de marzo en Punta Cana, NO es haitiano.
— 👙 Kenken 👙 (@FdezKendra) March 11, 2025
Bien blanquito que es, ojalá y no le haya hecho daño 🥺 pic.twitter.com/KlSHTBJ7eV
அந்த நபரின் பெயர், Joshua Stevem Ribe (24). ஜோஷுவா, தான் குடிபோதையில் வாந்தி எடுத்துக்கொண்டிருந்ததாக தெரிவித்ததுடன், சுதிக்ஷாவிடம் அவர் ஓகேவா என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணையில், தான் கடைசியாக சுதிக்ஷாவைப் பார்க்கும்போது அவர் முழங்கால் அளவு நீரில் கடலுக்குள் நின்றதாக கூறியுள்ளார்.
பின்னர், தான் போதையில் தூங்கிவிட்டதாகவும், தான் தூங்கும் முன் சுதிக்ஷா கடற்கரையில் நடந்து செல்வதை பார்த்ததாகவும் கூறியுள்ளார் ஜோஷுவா.
இப்படி அவர் மாற்றி மாற்றி பேசுவதால், அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
இதற்கிடையில், சுதிக்ஷாவும் ஒரு இளைஞரும் ஒருவரையொருவர் அணைத்தபடி செல்லும் CCTV காட்சிகளும் சிக்கியுள்ளன.
அவர் யார் என்பது தொடர்பிலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |