டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிசூட்டில் 21 பேர் உயிரிழப்புக்கு பொலிஸ் தான் காரணமா..! வீடியோ வெளியானதால் பரபரப்பு
அமெரிக்காவோயில் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச்சூட்டில் 21 உயிர்கள் பறிபோனதற்கு பொலிஸாரின் தாமதமான நடவடிக்கை தான் காரணம் என குற்றம்சாட்டும்படியான வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் படையினர் ஒரு மணிநேரத்திற்கு மேலாக துபணிந்து நடவடிக்கை எடுக்காமல் காத்திருந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மே 24-ஆம் திகதி, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் எலிமெண்டரி பள்ளியில் 18 வயது இளைஞன் சால்வடார் ராமோஸ் என்பவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவ, மாணவிகள் 2 ஆசிரியைகள் என மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் பொலிஸார் நடத்திய மீட்பு தாக்குதலின் போது சால்வடார் ராமோஸ்(18) சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.
மேலும், எலிமெண்டரி பள்ளியில் சால்வடார் ராமோஸ் தாக்குதல் நடத்துவதற்கு முன், அவரது சொந்த பாட்டியை தலையில் சுட்டு கொன்றுவிட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இச்சம்பவம் அமெரிக்க மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளில் பலவற்றிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின.
துப்பாக்கிச்சூடு நடந்து 2 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், சம்பவ இடத்திலேயே தாக்குதல்தாரி கொல்லப்பட்ட பிறகும், இன்னும் இது தொடர்பான விசாரணைகள் மற்றும் சர்ச்சைகள் தீரவில்லை.
பள்ளிக்குள் 21 உயிர்கள் பறிபோனதற்கு பொலிஸாரின் காலதாமதமான நடவடிக்கை தான் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.
NEW
— Yashar Ali ? (@yashar) July 12, 2022
The @statesman and @KVUE have obtained body cam footage and security camera footage from the shooting at Uvalde’s Robb Elementary.
Pay close attention to the time stamp in the upper left hand corner.
You don’t see anyone get shot in this video. https://t.co/HsytsOa0tR pic.twitter.com/L9JSse9SeD
இந்நிலையில், செவ்வாயன்று வெளியிடப்பட்ட காணொளியில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்காமல் காத்திருப்பதைக் காட்டுகிறது.
டெக்சாஸின் பொதுப் பாதுகாப்புத் தலைவரான ஸ்டீவ் மெக்ரா, மே 24 தாக்குதலுக்கு காவல்துறையின் பதில் நடவடிக்கையை "மோசமான தோல்வி" என்று கூறியுள்ளார். மேலும் "ஒருபோதும் தேவைப்படாத" வகுப்பறை சாவியைத் தேடுவதில் முக்கிய நேரத்தை அதிகாரிகள் வீணடித்ததாக அவர் கூறினார்.
ஆஸ்டின் அமெரிக்கன்-ஸ்டேட்ஸ்மேன் ஊடகத்தில் பெறப்பட்ட கண்காணிப்பு கமெராவின் வீடியோவில், 18 வயது துப்பாக்கிதாரி ராப் எலிமெண்டரி பள்ளிக்கு வெளியே தனது டிரக்கை மோதிவிட்டு, பின்னர் 11:33 மணியளவில் அரை தானியங்கி துப்பாக்கியுடன் கட்டிடத்திற்குள் நுழைவதைக் காட்டுகிறது.
அவன் பள்ளியினுள் நடந்து செல்லும்போது, ஒரு சிறுவன் ஒரு மூலையில் இருந்து அவனைப் பார்த்துவிட்டு, துப்பாக்கிதாரி வகுப்பறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது பயந்து ஓடிவிடுகிறான்.
துப்பாக்கிதாரி உள்ளே செல்வதற்கு முன் வாசலில் இருந்து 10க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் சுடுவதை கமெராவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கி ஏந்திய பல பொலிஸ் அதிகாரிகள் முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மூன்று நிமிடங்களுக்குள் பள்ளி கூடத்திற்கு வருவதைக் காணமுடிகிறது.
துப்பாக்கிச் சூடு நடக்கும் இடத்தை நோக்கி அவர்கள் கீழே செல்கிறார்கள், ஆனால் வகுப்பறையில் இருந்து துப்பாக்கிதாரி சுடும்போது பின்வாங்குகிறார்கள்.
அரை தானியங்கி ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் கேடயங்களுடன் ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் உட்பட உதவிக்கு கூடுதல் அதிகாரிகள் இருந்தும்கூட, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, ஹால்வேயின் முடிவில் பொலிஸார் பதுங்கியிருப்பதைக் காணலாம்.
கமெராவில் பதிவான நேரப்படி அவர்கள் ஒரு மணி நேரம் 14 நிமிடங்களுக்குப் பிறகு, அதிகாரிகள் இறுதியில் மதியம் 12:50 மணிக்கு வகுப்பறைக்குள் நுழைந்து துப்பாக்கிதாரியைக் கொன்றனர்.
வீடியோவில் குழந்தைகள் சுடப்பட்டதைக் காட்டவில்லை மற்றும் ஆஸ்டின் அமெரிக்கன்-ஸ்டேட்ஸ்மேன் அவர்களின் அலறல்களின் ஆடியோவை அகற்றியதாகக் கூறியுள்ளது. இந்நிலையில், போலீஸ் நடவடிக்கையின் மீதான சர்ச்சை அதிகரித்துள்ளது.