முகத்தை பளிங்கு மாதிரி வைத்து கொள்ள வேண்டுமா? கொத்தமல்லியை இப்படி பயன்படுத்துங்க
பொதுவாக நாம் வாசனைக்காக பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதன் தண்டு, இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.
இதில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும் கொத்தமல்லியில் வைட்டமின் ஈ யும் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது சருமப் பராமரிப்புக்கு மிகவும் மிகுந்ததாகும்.
எனவே இதனை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் இயற்கைமுறையில் முகத்தை பளிங்கு போல் வைத்திருக்க முடியும். அந்தவகையில் தற்போது இதனை எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி இலைகள் - 1 கப்
- எலுமிச்சை சாறு -1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல் -1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் -1 ஸ்பூன்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக அந்த சாறில் சிறிது எலுமிச்சை சாறும் கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள்.
பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். முதல் முறை பயன்படுத்தியதுமே நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.