தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா! ஒரே நாளில் 4000 நெருங்கியது பாதிப்பு எண்ணிக்கை..17 பேர் பலி!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4000 நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் தளவர்களுடனான கொரோனா கட்டுப்பாடுகள் இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மாநிலத்தில நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,986 ஆக அதிகரித்துள்ளது, 17 பேர் பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னை- 1,459, கோவை- 332, செங்கல்பட்டு - 390, திருவள்ளூர்- 208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மீண்டும் 10,685 ஆக உயர்ந்துள்ளது.
