கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களின் கவனத்திற்கு! உங்களுக்கான உணவுப் பட்டியல்
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல், ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்றுக்கு ஆளான நபர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அவர்களுக்கான உணவுப் பட்டியல் குறித்து இங்கு காணலாம்.
அதிகாலை - நீரில் ஊற வைத்து தோல் நோக்கிய பாதாம் (8 - 12 எண்ணிக்கை), நீரில் ஊர வைத்த வால்நட் 3 - 6 எண்ணிக்கை.
காலை உணவுக்கு முன் - மிளகு, மஞ்சள், இஞ்சி தட்டிப் போட்ட பால்.
காலை உணவு - எளிதில் செரிக்கக் கூடியதாக இருக்கும் இட்லி, உப்புமா, தலியா, தோக்லா, முட்டை, கதம்ப சாம்பார், காரமில்லாத புதினா அல்லது கொத்தமல்லி சட்னி.
காலை உணவுக்குப் பிறகு - வீட்டிலேயே சமைத்த முருங்கை கீரை சூப், தக்காளி சூப் அல்லது ஏதோ ஒரு காய்கறி சூப்.
மதிய உணவுக்கு முன் - இனிப்பு சேர்க்காமல் பீட்ரூட் மற்றும் நெல்லிக்காய் சாறு (50 - 100 மிலி) அல்லது கொய்யா, ஆரஞ்சு, கேப்சிகம், பைன் ஆப்பிள் சாலட்
மதிய உணவு - கொஞ்சம் அரிசி சாதம், ரசம், தக்காளி பருப்பு, கிச்சடி, குறைவாக தாளித்த தயிர் சாதம், (அரிசியை காய்கறி வேகவைத்த நீரில் சமைப்பது நல்லது)
மாலை - கறுப்பு கொண்டைக் கடலை சுண்டல், ராஜ்மா சுண்டல், எலுமிச்சை சாற்றுடன் சக்கரவள்ளிக்கிழங்கு, கடலைமிட்டாய், எல்லுருண்டை, கிரீன் டீ, இஞ்சி டீ, துளசி டீ
இரவு உணவு - சப்பாத்தி, கோதுமை தோசை, இட்லி, கதம்ப சாம்பார், புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி
இரவு உணவுக்குப் பிறகு - பருப்புகள் கொண்ட டார்க் சாக்லேட் 1 - 2 துண்டுகள்
உறங்கச் செல்வதற்கு முன் - மீண்டும் மிளகு, மஞ்சள், இஞ்சி தட்டிப் போட்ட பால்
பொதுவாக ஆப்பிள், ஓட்ஸ், வெங்காயம், கோதுமை போன்ற உணவுகளை ஒரு நாளில் ஏதாவது ஒரு வேளையில் எடுத்துக் கொள்வது நம் குடலுக்கு நல்லது.
வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும், சர்க்கரை, உப்பு, கெட்ட கொழுப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மைதா உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.