கொரோனாவை குணப்படுத்த மாத்திரை கண்டுபிடித்த பிரபல நிறுவனம்!
உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது அமெரிக்க நிறுவனமான மெர்க் அண்ட் ரிட்ஜ்பேக் நிறுவனம் கொரோனாவால் ஏற்படும் மரணத்தை தடுப்பதற்காக மாத்திரை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் மரணம் நிகழ்வதை 50 சதவீதம் தடுப்பதாகவும், மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலைமையை குறைப்பதாகவும் இந்த மருந்தைத் தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மாத்திரைக்கு மோல்னு பிரிவிர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சோதனைகளின் அடிப்படையில் விரைவில் அமெரிக்காவின் மருந்து நிர்வாக அமைப்பான FDA விடம் விண்ணப்பம் அளிக்க மாத்திரையைத் தயாரித்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.