உமிழ்நீரிலிருந்து கொரோனா கண்டறியும் பரிசோதனை: இன்று முதல் அறிமுகம் செய்யும் சுவிஸ் மாகாணம்
உமிழ்நீரிலிருந்து கொரோனா கண்டறியும் பரிசோதனை ஒன்று, சூரிச் விமான நிலையத்தில் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது.
சுவிட்சர்லாந்திலிருந்து புறப்படும் பயணிகள் இனி முன்போல் மூக்கிலிருந்து எடுக்கப்படும் மாதிரியைக்கொண்டு கொரோனா பரிசோதனை செய்யாமல், உமிழ்நீரிலிருந்து கொரோனா பரிசோதனை செய்யலாம்.
இப்போது நடைமுறையிலிருக்கும் பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வர 24 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த உமிழ்நீரிலிருந்து செய்யப்படும் சோதனை முடிவுகள் சுமார் ஐந்து மணி நேரத்துக்குள்ளேயே தயாராகிவிடும் என்பது இந்த சோதனையின் சிறப்பு!
அத்துடன், இந்த சோதனையை செய்ய மருத்துவ துறை ஊழியர்கள் தேவையில்லை, பயணிகளே தாங்களாகவே செய்துகொள்ளலாம் என்பது மற்றுமொரு சிறப்பு.
இந்த பரிசோதனை கிட்டின் விலை 195 சுவிஸ் ஃப்ராங்குகள்.
பயணிகள் மாதிரியை சேகரித்ததும், அவை அருகிலுள்ள ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பப்படும். ஒரு நாளைக்கு நான்கு முறை மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்தவர்களுக்கு, பரிசோதனை முடிவுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
தினமும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பரிசோதனைகள் செய்யப்படும். 5 மணிக்கு மேல் சேகரிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகள் மட்டும், மறுநாள் தயாராகும்.
இந்த பரிசோதனை, பயணம் செய்பவர்களுக்கு, குறிப்பாக விமான பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை அவசியம் என்பதால், பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்