6 மாநிலங்களில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா! இந்தியா அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்
இந்தியாவின் 6 மாநிலங்ளில் தினசரி பதிவாகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒருபுறம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் சமீபநாட்களாக நாட்டில் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
மக்கள் கொரோனா தடுப்பூசி போடுக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம், சமூக இடைவெளி மற்றும் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 53,476 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 251 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் குஜராத்த ஆகிய மாநிலங்களில் மீண்டும் தினசரி பதிவாகும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்தது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 5,31,45,709 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
