அமெரிக்காவில் 500,000 உயிர்களை பலிவாங்கிய கொரோனா! இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ள ஜோ பைடன்
அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோரின் மொத்த எண்னிக்கை அரை மில்லியனை எட்டவுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 5 வாரங்களாக கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் தற்போது மொத்த இறப்பு எண்ணிக்கை 500,000-த்தை எட்டவுள்ளது.
பெருந்தொரு தொடங்கியதிலிருந்து இதுவரை 28 மில்லியனுக்கும் அதிகமான COVID-19 பாதிப்புகள் அமெரிக்காவை உலுக்கியுள்ளன, அதில் 497,862 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று வெள்ளை மாளிகையில் இரணிந்தவர்களுக்கு அனலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், First Lady ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
1918-ஆம் ஆண்டு influenza வைரசுக்கு அமெரிக்காவில் 650,000 பேர் பலியானார்கள். அதன் பிறகு 102 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட பேரிழப்பை அமெரிக்கா சந்தித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட தற்போது கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.