பிரான்ஸ் எப்போது கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும்?
Omicron வகை மரபணு மாற்றக் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் சில அமுலுக்கு வந்தன.
இப்போதோ, பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களில் 98 சதவிகிதம் பேரும் Omicron வகை கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை சுமார் 400,000ஆக உள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதா?
என்னென்ன விதிகள் அமுலில் உள்ளன?
ஆரஞ்சு நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து பிரான்சுக்கு வரும் அனைவரும், அவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, பெறாவிட்டாலும் சரி, அவர்கள் பயணம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு செய்துகொண்ட கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நிரூபிக்கவேண்டும்.
தடுப்பூசி பெறாதவர்கள் தாங்கள் அத்தியாவசிய காரணத்துக்காக வருவதாக நிரூபித்தால் மட்டுமே பிரான்சுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
என்ன மாற்றம் செய்யப்பட உள்ளது?
பிரித்தானியாவை விட பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை அதிகமாகத் துவங்கியுள்ளதால், பல பிரித்தானிய பயணிகள் 24 மணி நேரத்துக்கு முன் செய்யப்படும் கொரோனா பரிசோதனை விதி நியாயமற்றது, தேவையற்றது என கருதியதால். அந்த விதி பிப்ரவரி 4 அன்று விலக்கிக்கொள்ளப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரான்சுக்கு வருவோர் எந்த கொரோனா பரிசோதனை முடிவுகளையும் காட்டவேண்டியடில்லை என கூறப்பட்டுவிட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்து வருவோருக்கு அந்த விதிகள் எப்போது விலக்கிக்கொள்ளப்படும்?
பிப்ரவரி மாதம் 4ஆம் திகதி பிரான்ஸ் தனது சிவப்புப் பட்டியலில் இருந்த அனைத்து நாடுகளையும் ஆரஞ்சுப் பட்டியலுக்கு மாற்றிவிட்டது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பெற்ற அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனைக் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக, பிப்ரவரி மாத நடுப்பகுதி வாக்கில் ஒரு அறிவிப்பு வெளியாகும் என அரசு தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.