கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை! அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள்
அமெரிக்காவில் முழுமையான கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் என்ன செய்யலாம்? எதை செய்யக்கூடாது? என்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனை அந்நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனமான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) நேற்று வெளியிட்டுள்ளது.
விதிமுறைகள் முழுமையான தடுப்பூசி பெற்றவர்கள், மற்றோரு தடுப்பூசி பெற்றவர்களுடன் முகக்கவசம் இல்லாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உட்புறங்களில் ஒன்று கூடலாம்.
அதேபோல், முழுமையான தடுப்பூசி பெற்றவர்கள் இதுவரை எந்த தடுப்பூசியம் போடாதவர்களுடனும் ஒன்று கூடலாம், ஆனால் அதற்கு சில விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி பெறாத ஒரே வீட்டை சேர்ந்த நபர்களுடன் மட்டுமே முகக்கவசம் இல்லாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உட்புறங்களில் ஒன்று கூடலாம்.
அதிலும் அந்த வீட்டில் உள்ளவர்கள் எந்த நோய்களுக்கும் எதிராக குறைந்த ஆபத்தை உடையவர்களாக இருக்க வேண்டும்.
கோவிட்-19 தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தாலும், முழுமையான தடுப்பூசி பெற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவோ அல்லது பரிசோதனை செய்யவோ அவசியம் இல்லை.
ஆனால், 14 நாட்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்காணித்துக் கொள்ளவேண்டும். இதன்முலம் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியோர்கள் தங்கள் தடுப்பூசி போடாத பேரக் குழந்தைகளை சந்திக்கலாம், பழகலாம்.
அதேபோல், கோவிட்-19க்கு அதிக ஆபத்தில் இருக்கும், அல்லது அதிக ஆபத்தில் இருக்கும் வீட்டு உறுப்பினரைக் கொண்டவராக இருந்தால், அவர்களை சந்திக்கும்போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்.
பல வீடுகளைச் சேர்ந்தவர்களை சந்திக்கும்போதும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும். பயணங்களுக்கான வழிகாட்டுதல்களில் எந்த மாற்றமும் இல்லை என CDC கூறியுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மாடர்னா மற்றும் ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸை பெற்றவர்கள் அல்லது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள், கோவிட் -19 வைரஸை பரப்பவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆனால், தடுப்பூசியின் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை விஞ்ஞானிகள் இன்னும் புரிந்து கொள்ள முயற்சித்து வருகின்றனர் என்றும் CDC கூறியுள்ளது.


