சுவிஸ் மாகாணமொன்றில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: எப்போதிலிருந்து?
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் இம்மாதம் கடைசியிலிருந்து பொதுமக்கள் அனைவருக்கும் வயது வித்தியாசம் இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூரிச்சில் தடுப்பூசி திட்டம் மிகவும் மெதுவாகவே நடைபெற்று வரும் நிலையில், வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு தடுப்பூசி திட்டத்திற்கு சற்று உற்சாகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாத இறுதியிலிருந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக பதிவு செய்தல் தொடங்க உள்ளது என்றாலும், பதிவு செய்துகொள்வதால் சீக்கிரம் தடுப்பூசி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
அதிக அபாயம் உள்ளவர்கள் என கருதப்படுவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஏப்ரல் மாத துவக்கத்தில் தடுப்பூசி போடும் மையங்கள் சூரிச்சில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.