இந்தியாவில் மார்ச் முதல் 2-ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடக்கம்: யார் யாருக்கு தடுப்பூசி கிடைக்கும்?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இயக்கத்தின் இரண்டாம் கட்டம் மார்ச் 1-ஆம் தகதி தொடங்குவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்திதுள்ளது.
அதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட நோயுற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
10,000 அரசாங்க மையங்களில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படவுள்ளது மற்றும் 20,000 தனியார் மையங்களில் தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி போட விரும்புவோர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தனியார் மையங்களில் தடுப்பூசி போடுவதற்கான கட்டணங்கள் சில நாட்களில் உறுதிப்படுத்தப்படும் என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
இரண்டாம் கட்டத்தில் சுமார் 27 கோடி மக்கள் தடுப்பூசி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சுமார் 10 கோடி பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
.