பிரான்சில் இன்று நள்ளிரவு முதல் மேலும் 4 நாடுகள் தனிமைப்படுத்தல் பட்டியலில் சேர்ப்பு! தடுப்பூசி போடுவதில் சாதனை
வெளிநாடுகளில் இருந்து பிரான்சிற்குள் வந்தால், கட்டாய தனிமைப்படுத்தப்படும் பட்டியலில், மேலும் நான்கு நாடுகளை பிரான்ஸ் அரசு சேர்த்துள்ளது.
பிரான்சில் கடந்த மாதம் 24-ஆம் திகதி முதல், இந்தியா, பிரேஸில், செலி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்தால், கட்டாய தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் திகதி முதல், இலங்கை, கத்தார், துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இந்த பட்டியலில் சேர்ந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நான்கு நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் இருந்து பிரான்சுக்கு வருபவர்கள் அனைவரும் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 600.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய சாதனையாகும்.
இது குறித்து சுகாதார அமைச்சர் Olivier Véran கூறுகையில்,, நாளை சனிக்கிழமையுடன் பிரான்சில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை எட்டும் என தெரிவித்துள்ளார்.