குழந்தைகளை குறி வைக்கும் டெல்டா வைரஸ்! பிரபல நாடு எடுத்த அதிரடி முடிவு
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அந்நாட்டு அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
சீன நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் 3-11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங் உட்பட பல இடங்களில் மழலையர் பள்ளி குழந்தைகளை நோய் தொற்று பாதித்துள்ளது. அதே போல் சமீபத்தில் ஷென்சோ நகரில் 19 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.
இதனால் 3-11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதார பணியாளர்கள், பள்ளிகளில் பணியாற்றும் நபர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோட்ஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த வருடத்தை விட இந்த வருடத்தை ஒப்பிடுகையில் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 10 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சீனாவின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.