கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதால் இந்த பாதிப்பு ஏற்படுமா? ஆய்வில் வெளியான பகீர் தகவல்
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதால் இதய நோய் ஏற்படுத்துமா என்பதை குறித்து சமீபத்திய ஆய்வில் சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவை அடுத்து உலக நாடுகளை Omicron வைரஸ் பயமுறுத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது சுமார் 77க்கும் மேற்பட்ட நாடுகளில் Omicron பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி மட்டுமே உலக நாடுகளின் பெரும் நம்பிக்கையை இருந்து வருகின்றது.
அந்த வகையில் தடுப்பூசி குறித்து சமீபத்தில் நடந்த ஆய்வில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. AstraZeneca, Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளின் முதல் டோஸ்களை செலுத்தி கொள்வதால் myocarditis (இதய எலும்பினை பலவீனப்படுத்தும் நோய்) ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு myocarditis பாதிக்கப்படுவோர் நான்கு மடங்கு அதகரித்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்து வரும் Julia Hippisley-Cox இதுகுறித்து கூறியதாவது, கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பில் இருந்து தடுப்பூசி நம்மை சிறப்பாக பாதுகாத்து வருகின்றது. இருப்பினும் அதே வேளையில் தடுப்பூசிகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து அறிந்து கொள்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தி கொண்ட 28 நாள்களில் இதய பாதிப்பு ஏற்படுகிறதா கொரோனா பாதிப்புக்கு பிறகு இதய பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு ஒரு மில்லியன் மக்களில் 1 முதல் 10 பேர் வரை மாரடைப்பு நோய் ஏற்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு மில்லியன் பேரில் 40 பேருக்கு மாரடைப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.