பிரான்சை உலுக்கும் கொரோனா வைரஸ்! ஒரே நாளில் 3 லட்சத்தை தாண்டிய பாதிப்பு.. சுகாதாரத்துறை எச்சரிக்கை
பிரான்சில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் கடந்த மாதத்தில் இருந்து மெல்ல மெல்ல தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron மாறுபாடும் அதிகரித்து வருகின்றது.
இரண்டு வைரஸிற்கு நடுவில் சிக்கி கொண்டு மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மட்டும் பிரான்ஸ் நாட்டில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 252 நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 334 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் பிரபல செய்தி தொடர்பாளர் கூறியதாவது, பிரான்சில் கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை.
அதுமட்டுமில்லாமல் 2 வாரங்களில் பரவல் 3 மடங்கு அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான். அடுத்த சில வாரங்களில் இந்த நிலை மிகவும் மோசமடையும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அனைவரும் எந்த தயக்கமும் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி மட்டுமே இந்த பெருந்தொற்றில் இருந்து நம்மை காக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.