ஐரோப்பியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தொற்று! உலக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் உலக நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் நேற்று ஜெனிவாவில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த 7 நாட்களில் 56 நாடுகளில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று 10 சதவீதம் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
இதனால் மீண்டும் படுக்கை வசதி பற்றாக்குறை, ஐசியு பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் நமக்குப் பல அனுபவங்கள் கிடைத்துவிட்டன.
இனிமேலும் மோசமான நாட்களை அனுமதிக்கக் கூடாது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நம்மிடம் அனைத்துக் கருவிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் இருக்கின்றன.
இந்நிலையில் ஐரோப்பாவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்து மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 18 லட்சம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் 6 சதவீதமும் மத்திய ஆசியாவில் 12 சதவீதமும் கரோனா தொற்று கடந்த வாரத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.