தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? உலக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்
தாய்ப்பால் மூலம் கொரோனா பரவுமா என்பது குறித்து உலக சுகாதார மையம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கொரோனா என்னும் கோவிட்-19 பெருந்தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார பட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகின்றது. இதில் நிறைமாத கர்ப்பிணிகளும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கும் நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரோனா பரவுமா என்ற சந்தேகம் பல பெண்களுக்கு உண்டு.
இதையடுத்து உலக சுகாதாரத்துறை சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது, கொரோனா பாதித்த பெண்கள் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் அதற்கு முன் இரண்டு முகக்கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும்.
தாய்ப்பால் ஊட்டும் நேரம் தவிர மற்ற நேரத்தில் குழந்தையிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில் அவர் இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனை படி பவுடர் உணவுகள் கொடுக்கலாம்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிறுவனர் டெட்ரோஸ், கர்ப்பிணி தாயிடமிருந்து குழந்தைக்கு கருவிலயே கொரோனா பரவுவதும் அல்லது தாய்ப்பால் மூலமாக கொரோனா தொற்று பரவுவதும் மிகவும் அரிதான ஒன்று. அதுமட்டுமில்லாமல் தாய்ப்பாலில் வைரஸின் இருப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022