கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதித்தால் இது நான் நிலை! அமெரிக்கா ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனாவால் பாதித்த கர்ப்பிணி பெண்களுக்கு பெரும்பாலும் குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்றது. கொரோனாவால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இது வரை சுமார் 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியது.
கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் கணிக்க முடியாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்படும். சில சமயங்களில் அவை பிரசவ காலத்தில் பெரும் சிக்கலாய் அமைவதும் உண்டு.
இந்நிலையில் அமெரிக்காவின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், கர்ப்பிணி பெண்களை கொரோனா பாதித்தால் 60 சதவீதம் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
குறைப்பிரசவம், கர்ப்பிணிக்கும் சிசுவுக்கும் சவாலான விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு 32 வாரங்களுக்கு முந்தைய குழந்தைப் பிறப்பு சிசுவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை கொண்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.