பீதியில் உலக நாடுகள்.. ஒரே வாரத்தில் உச்சம் தொட்ட கொரோனா வைரஸ்.. உலக சுகாதாரத்துறை தகவல்!
உலகளவில் ஒரே வாரத்தில் 2 கோடியே 10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கடந்தும் இன்று வரை கொரோனா வைரஸ் ஒழிந்தபாடில்லை.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் கோர முகத்தை பல்வேறு வடிவங்களில் காட்டி வருகிறது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரத்துக்கான கொரோனா வைரஸ் பரவல் நிலை தொடர்பான வாராந்திர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது.
உலகளவில் ஒரே வாரத்தில் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகம் ஆகும்.
அந்தவகையில் அமெரிக்காவில் 42 லட்சத்து 15 ஆயிரத்து 852 பேரும் (24 சதவீதம் உயர்வு), பிரான்சில் 24 லட்சத்து 43 ஆயிரத்து 821 பேரும் (21 சதவீதம் அதிகரிப்பு), இந்தியாவில் 21 லட்சத்து 15 ஆயிரத்து 100 பேரும் (33 சதவீதம் உயர்வு), பிரேசிலில் 8 லட்சத்து 24 ஆயிரத்து 579 நபர்கள் (73 சதவீதம் உயர்வு) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.